`குர்பானி' கொடுக்க 41 ஒட்டகங்கள் தயார் !

வடசென்னை பகுதியில் பக்ரீத் பண்டிகைக்காக `குர்பானி' கொடுக்க 41 ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ( இன்று வந்த தினந்தந்தி செய்தி )

முஸ்லிம்களின் `தியாகத் திருநாள்' என்று அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை வருகிற 21-ந் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகையின் போது முஸ்லிம்கள் ஆடு, மாடுகளை `குர்பானி' (பலியிடுதல்) கொடுப்பது வழக்கம்.

கடந்த 5 வருடங்களாக சென்னையில் பக்ரீத் பண்டிகையின் போது ஒட்டகங்களை குர்பானி கொடுத்து வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை நெருங்கி விட்டதால் ராஜஸ்தானில் இருந்து ஒட்டகங்களை வரவழைத்து உள்ளனர்.

சென்னை வண்ணாரப்பேட்டை மேற்கு கல்லறை (சரியான பேர்தான்) சாலையில் உள்ள காலி இடத்தில் குர்பானிக்காக கொண்டு வரப்பட்ட 20 ஒட்டகங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. வண்ணாரப்பேட்டை தவிர தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, ராயபுரம், திருவொற்றியூர், மண்ணடி ஆகிய பகுதிகளில் 21 ஒட்டகங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.

41 ஒட்டகங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளதால் வடசென்னை பகுதி முழுவதும் கலகலப்பாக காணப்படுகிறது. இந்த ஒட்டகங்களை ஆண்களும், பெண்களும், சிறுவர்-சிறுமிகளும் கூட்டம், கூட்டமாக வந்து பார்த்துச் செல்கிறார்கள். சிறுவர்-சிறுமிகள் ஒட்டகங்களுக்கு இலை, தழைகளை சாப்பிடக் கொடுத்து மகிழ்ச்சி அடைகிறார்கள்.

இந்த ஒட்டகங்கள் 25 ஆயிரம் முதல் 32 ஆயிரம் ரூபாய் வரை விலைக்கு வாங்கி வரப்பட்டு உள்ளதாகவும், 350 கிலோ முதல் 450 கிலோ எடை உடையன என்றும் ஒருவர் கூறினார்.

குர்பானி கொடுக்க ஒட்டகங்கள் தவிர ஆடுகளும் ஆந்திரா மாநிலம் நெல்லூரில் இருந்து ஆயிரக் கணக்கில் கொண்டு வரப்பட்டு உள்ளன. இவை வியாசர்பாடி எம்.கே.பி.நகர் 18-வது தெருவில் உள்ள காலியிடத்தில் நிறுத்தப்பட்டு உள்ளன. இந்த இடத்தில் குர்பானியையொட்டி ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம்.

No comments:

Post a Comment