மேல்படிப்பு தொடர பண உதவி வேண்டும் :மாநில ரேங்க் மாணவி வேண்டுகோள்

 
மேல்படிப்பு தொடர பண உதவி வேண்டும் :மாநில ரேங்க் மாணவி வேண்டுகோள்
மே 15,2010,00:06  IST

 

தூத்துக்குடி : பிளஸ் 2வில் உளவியல் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்த காயல்பட்டணம் பள்ளி ஏழை மாணவி பாத்திமுத்து, தனது மேல்படிப்பு தொடர யாராவது பணஉதவி செய்யவேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். திருச்செந்தூர்அடுத்த காயல்பட்டணம் பரிமார் தெருவைச் சேர்ந்தவர் பாத்திமுத்து. அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியான இவர், பிளஸ் 2வில் உளவியல் பாடத்தில் 200க்கு 172 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவரது தந்தை அபுமுகமது, சென்னையில் சமையல் தொழில் செய்து வருகிறார். இவரது தாயார் பால் அமீனா, ஆறு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள் உள்ளனர். பாடவாரியாக


இவர் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ் -123, ஆங்கிலம் -92, மனை இயல் -125, உளவியல் -172, எழுத்து மற்றும் செய்முறை தேர்வு - 366. மொத்தம் - 878/1200.


பாத்தி முத்து கூறுகையில்,' எனது இந்த சாதனைக்கு பெற்றோர், ஆசிரியர்கள் காரணம். நர்சிங் அல்லது ஆசிரியர் பயிற்சி படிக்க விரும்புகிறேன். அதற்கு போதுமான பண வசதியில்லை. யாராவது பண உதவி செய்தால் மேல்படிப்பை தொடர தயாராகவுள்ளேன்'' என்றார்.


உதவி செய்ய நீங்கள் தயாரா ? : இந்த ஏழை மாணவிக்கு நமது வாசகர்கள் பலர் உதவி செய்ய தயாராக இருப்பதாக மெயில் மூலமும் , வாசகர் பகுதி மூலமும் தெரிவித்திருந்தனர். அவர்கள் ஈகை எண்ணத்தை ஈடேற்றிட மாணவி பாத்திமுத்துவின் முகவரியும், மொபைல் எண்ணும் தரப்பபட்டுள்ளது. உதவி செய்ய விரும்புவோர் இவர்களிடம் தொடர்பு கொள்ளலாம்.


முகவரி: பாத்திமுத்து, பா/ கா . நாகூர் முத்து , 49 பள்ளிமார்தெரு, காயல்பட்டணம், தூத்துக்குடி மாவட்டம் , மொபைல் எண்: 9698386885 .

தினமலர்:

 

நடைபெற்று முடிந்துள்ள பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில், உளவியல் (சைக்காலஜி) பாடத்தில், காயல்பட்டினம் தீவுத்தெருவில் அமைந்திருக்கும் அரசு மகளிர் மேனிலைப்பள்ளி மாணவி ஏ.எம்.ஃபாத்திமுத்து மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
காயல்பட்டினம் பரிமார் தெருவைச் சார்ந்த ஓ.எஸ்.அபூ முஹம்மத் - பால் ஆமினா தம்பதியின் மகளான இவர், அரசு மகளிர் மேனிலைப்பள்ளியில் குழந்தை வளர்ப்பு மற்றும் சத்துணவியல் பாடப்பிரிவைத் தேர்வு செய்து படித்து முடித்துள்ளார்.
பாடவாரியாக ,வரது மதிப்பெண்கள்:
தமிழ் - 123
ஆங்கிலம் - 092
மனையியல் - 125
உளவியல் - 172 (மாநிலத்தில் முதல் மதிப்பெண்)
குழந்தை வளர்ப்பு மற்றும் சத்துணவியல் 166
செய்முறை: 200
மொத்த மதிப்பெண்கள்: 1200க்கு 878
இவரது தந்தை அபூ முஹம்மத் சென்னையில் சமையல் வேலை செய்து வருகிறார். தாயார் இல்லத்தரசியாக உள்ளார். இவருடன் சேர்த்து இவரது பெற்றோருக்கு 7 பெண்கள், 2 ஆண்கள் உட்பட 9 மக்கள் உள்ளனர்.
தனது சாதனை குறித்து ,ம்மாணவி தெரிவித்துள்ள கருத்துக்கள் பின்வருமாறு:- எல்லாம்வல்ல இறைவன் பேரருளால் உளவியல் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது எனக்கு மெத்த மகிழ்ச்சியைத் தருகிறது.
ஆரம்பம் முதற்கொண்டே எனது தலைமையாசிரியை யு.திருமலை, வகுப்பாசிரியை ஜீவனி மற்றும் உளவியல் பாட ஆசிரியை வளர்மதி ஆகியோர் எனக்கு மிகுந்த ஊக்கமளித்து உற்சாகத்துடன் படிக்கச் செய்தனர்.
எனது வகுப்பாசிரியை அவர்கள் தினமும் மாலை நேர பாடம் முடிந்ததும், எங்களுக்கு மாலை 6.30 மணி வரை சிறப்புப் பாடம் நடத்துவார்கள். அதன் பின்னரும், நான் அவர்களுடனேயே அவர்கள் வீட்டிற்கு தினமும் சென்று பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றுக்கொள்வேன்.
எனக்கு ஆசிரியர் பயிற்சிக்கு (பி.எட்.) படிக்க மிகவும் ஆசையாக உள்ளது. என்றாலும், எனது குடும்பத்தில், சமையல் வேலை செய்து வரும் என் தந்தை ஒருவரின் சிறிய வருமானத்தைக் கொண்டே மொத்த குடும்பத்துக்கான செலவுகளையும் சமாளித்து வருகிறோம். இதன் காரணமாக, நான் செலவழித்து படிக்க இயலாத நிலை உள்ளது.
எனக்கு யாரேனும் உதவினால் நான் நினைத்தபடி ஆசிரியர் பயிற்சிக்கு படிப்பேன். அல்லது குறைந்தபட்சம் செவிலியர் (நர்ஸிங்) படிப்புக்கேனும் முயற்சி செய்து படித்து முன்னேறுவேன் என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி : காயல்பட்டிணம் இணையதளம்

 

Assalamu alaikkum

 
Dear All,
 
Planning to do some collection for this girl. Kindly do your contribution with any amount.
We will send some amount.
 
Best Regards
Waheed
 
 
 

No comments:

Post a Comment