பாராக் ஒபாமா



பாராக் ஒபாமா இன்று உலகெங்கும் அறிமுகமான ஒரு பெயர், அமெரிக்க அதிபருக்கான ஓட்டத்தில் முன்னணியில் இருக்கும் ஒரு பெயர் மட்டுமன்றி, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அமெரிக்க மக்கள் ஆர்வமுடம் எதிர் நோக்கும் ஒரு இளைய வேட்பாளராகவும் இருக்கிறார். உலகப் பொருளாதாரம் மற்றும் அரசியலைத் தீர்மானிக்கும் ஒரு மிகப் பெரும் வல்லமை பொருந்திய நாட்டின் அடுத்த அதிபரைப் பற்றி நாமும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் மட்டுமன்றி, உலக அரசியலின் கூறுகளை கொஞ்சம் கழுகுப் பார்வை கொள்வதற்குமான தேவையுமாகும்.

 

இளமைக் காலம்

ஆங்கிலக் காலனி அரசில், ஒரு அடிமை வேலை செய்த தாத்தா, கென்யாவில் பிறந்து ஆடுகளை மேய்த்து பிழைத்து வந்த ஒரு கிராமத்து விவசாயத் தந்தையின் மகன்தான் இன்று நாமெல்லாம், தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும் பாராக் ஒபாமா.

ஹவாய்த் தீவுகளின் ஒரு சிறிய வாழிடத்தில், 1961 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் நாள் பிறந்தார் இந்த உலக சரித்திரத்தில் நிரந்தர இடம் பிடிக்கப் போகும் இளைஞர், முதன் முதலில் பார்த்த வேலை ஆடு மேய்த்து தான். ஆம், தனது தந்தையாருடன் ஆடுகளை மேய்ப்பது அவற்றிற்கு உணவளிப்பது போன்ற வேலைகளைத் தான் படிக்கும் நேரம் போக எஞ்சியிருக்கும் நேரங்களில் செய்து வந்தார் ஒபாமா.பாராக் ஒபாமாவின் தந்தையார் பெயரும் பாராக் ஒபாமா தான், வழக்கம் போல அவரை " சீனியர் ஒபாமா" என்றும், மகனை "ஜூனியர் ஒபாமா" என்றும் அமெரிக்கா சொல்லத் துவங்கிவிட்டது.

ஜூனியர் ஒபாமாவின் தாயார், ஆன் டுன்காம் (ANN DUNHAM), கன்சாஸ் என்னும் சிற்றூரில் பிறந்து வளர்ந்தார், அவருடைய தந்தையார் ஒரு ராணுவ வீரராக ஐரோப்பிய நாடுகளில் இரண்டாம் உலகப் போரில் பங்கு பெற்றார், அந்த நேரம் தாயாரின் அரவணைப்பில் வளர்ந்த ஆன் அம்மையார், பின்னர் ஹவாய் பல்கலைக் கழகத்தில் பயின்றார், அங்கு கல்வியில் சிறந்த மாணவராக அப்போது விளங்கிய "சீனியர் ஒபாமாவை" காதலித்து மணம் புரிந்து கொண்டார் ஆன் அம்மையார், ஹவைப் பல்கலையில் கிடைத்த கல்விக்கான உதவித் தொகையும் ஊக்கமும், சீனியர் ஒபாமாவின் அமெரிக்கக் கனவுகளை நனவாக்கத் துவங்கியது.

காலப் போக்கில் கென்யாவிற்குத் திரும்பிய தந்தையாரைப் பிரிந்து, தாயாருடன் இந்தோனேசியாவில் சிறிது காலம் இருந்த " ஜூனியர் ஒபாமா" பின்னர் நியூயார்க் நகருக்கு வந்து தனது பட்டப் படிப்பை கொலம்பியா பல்கலைக் கழகத்தில் முடித்தார். இதனால் இவர் ஒரு ஆப்பிரிக்க, அமெரிக்க, ஆசிய மக்களின் வாழ்வியலை முழுதும் அறிந்த தலைவராகக் கருதப்படுகிறார்.

தனது சட்டப் படிப்பின் ஆர்வத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு, தனது தாயாரின் விருப்பத்திற்கு இணங்க, 1885 இல் சிகாகோ நகரத்து தேவாலயங்களில் ஊழியம் செய்யப் புறப்பட்ட "ஜூனியர் ஒபாமா" வேலையற்ற ஏழை மக்களிடையே சமூகப் பணிகளில் ஈடுபட்டார். அங்கே தான் ஒரு உண்மையை " ஜூனியர் ஒபாமா" கண்டு கொண்டார், உலகில் நிலவும் இது போன்ற சமூகச் சிக்கல்களை தீர்க்க வெறும் சேவை மட்டும் போதாது, அரசியல் மற்றும் சட்ட மாற்றங்கள் தான் சமூகச் சிக்கல்களை தீர்க்க உதவும் என்கிற அரசியல் ஆர்வம் மேலிட, ஹார்வர்ட் பலகலைக் கழகத்தில் 1991 ஆம் ஆண்டு சேர்ந்த " ஜூனியர் ஒபாமா", சட்டப் படிப்பை முடித்த பின்னர் " ஹர்வர்ட் சட்டக் குழுவின்" முதல் ஆப்பிரிக்க அமெரிக்கத் தலைவரானார். மீண்டும் சிகாகோ நகருக்குத் திரும்பிய ஒபாமா, ஒரு "சமூக உரிமைகளின்" வழக்குரைஞராக தனது பணிகளைத் துவக்கினார். சட்ட நுணுக்கங்களைக் கற்றுத் தரும் ஆசிரியராகவும் பகுதி நேரப் பணியாற்றிய ஒபாமா, அவரது அயராத மக்கள் பணியின் காரணமாக 1996 இல் இல்லினோய்ஸ் மாநில செநேட்டராகத் தேர்வு பெற்றார், பின்னர் 8 ஆண்டுகள் செநேட்டராகத் தனது பணிகளைச் செவ்வனே செய்த இவருக்கு அமெரிக்கப் பாராளுமன்றத்திற்கு செநேட்டராகும் வாய்ப்பு 2004 இல் வந்து சேர்ந்தது.

அரசியல் வாழ்க்கை

பல்வேறு வாழிடங்களில், பல்வேறு சமூகக் கலாச்சார முகங்களைக் கொண்ட மக்களோடு தனது வாழ்வை நகர்த்திய ஒபாமாவின், அரசியல் அறிவு மிகக் கூர்மையாக வளரத் துவங்கியது. அரசியலுக்கு அப்பாற்பட்டு அமெரிக்க மக்களை தம்மால் இணைக்க முடியும் என்று நம்பிக்கையோடு விவாதங்களை எதிர் கொள்கிறார் " ஜூனியர் ஒபாமா".

இல்லிநோய்சில் செநேட்டராக்ப் பணியாற்றிய போதே, வருமான வரிக் கடன் திட்டம், மற்றும் குழந்தைகளின் கல்வித் திட்டம் போன்றவைகளால் செல்வாக்குப் பெற்ற இவரது திட்டங்கள், ஆக்கிரமிப்பு மற்றும் நில ஆதிக்கக் கும்பலின் நிலையைத் தகர்த்த ஒபாமாவின் கடும் நடவடிக்கைகள் பலரது பாராட்டுக்கும் உரித்தானது. சட்டப் பூர்வமான நடவடிக்கைகளை இவர் மேற்கொண்ட போது, அதிகாரிகளை, வீடியோப் படம் எடுக்கச்சொல்லி ஆக்கிரமிப்பாளர்களின் வயிற்றில் புளியைக் கரைத்தார்.

குடிமக்கள், அனைவரும் வரிப் பணத்தின் செலவு விகிதம் என்ன என்பதை இணையத்தின் மூலம் நேரடியாகத் தெரிந்து கொள்ள வகை செய்ததின் மூலம், மக்களின் நம்பிக்கையை அரசு பெறுவதற்கு உதவியாக இருந்த ஒபாமா, ஊழலுக்கு எதிரான ஒரு போர்க்குரலாகவும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒலித்தார்.

நாடாளுமன்ற அரசியல் பணிகள்

ஈராக் மற்றும் ஆப்கன் போரில் பாதிப்படைந்த இல்லினோய்ஸ் ராணுவ வீரர்களின் உதவித் தொகை மற்றும், மருத்துவச் செலவுகளை அரசிடம் இருந்து பெற்றுக் கொடுப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டிய ஒபாமா, தீவிரவாதத்திற்கு எதிரான பல்வேறு முகமைகளை தனது வெளிநாட்டு சுற்றுப் பயணங்களின் போது வெளிப்படுத்தினார். திரவ எரிபொருட்களின் தரத்தை மேம்படுத்தவும், அதன் மூலம் சுற்றுச் சூழலை காக்கவும் உறுதி பூண்ட ஒபாமா, மாற்று எரிபொருட்களின் தேவையை எப்போதும் ஆதரிப்பவர் ஆவார்.

தனது வெற்றிகரமான அரசியல் பயணத்தில் இன்று வெற்றிக்கு மிக அருகாமையில் இருக்கும் " ஜூனியர் ஒபாமா" கத்ரீனா புயல் பாதிப்புகளை அதனால் ஏற்படும் ஏழ்மை நிலைகளை நீக்கவும், குழுச் சண்டைகளில் இருந்து மக்களைக் காக்கவும் குரல் கொடுத்தார்,

இந்த வெற்றிகளுக்குக் காரணமாக " ஜூனியர் ஒபாமாவின்" அயராத உழைப்பையும், உறுதியையும் சொன்னாலும், உண்மையான இவரது வெற்றிக்குக் காரணம், அன்போடு குடும்பத்தைக் கொண்டு செலுத்தும் " மிகேல்" அம்மையாரையும், (அதாங்க அவருடைய அன்பு மனைவி), அப்பாவுடன் இருக்க வேண்டும் எப்போது அடம் பிடிக்காத பத்து வயதுப் பெண் குழந்தை "மாலியா" மற்றும் ஏழு வயது நிரம்பிய "சாஷா" ஆகியோரையும் சாரும்.

"தொடருட்டும் அவரது பணிகள், உலகம் தழைத்தோங்கும் பாதையில்" என்று நாமும் இந்தக் குடும்பத்தை வாழ்த்தி வரவேற்போம்.

 


No comments:

Post a Comment