துபாயில் கண்ட இடத்தில் துப்பினால்......


துபாய்: துபாய் நகரில் கண்ட இடங்களில் எச்சில் துப்புவோருக்கு கடும் அபராதம் விதிக்கப்படும். அசுத்தம் ஏற்படும் வகையில் துப்புவோருக்கு ரூ. 6000 அபராதம் விதிக்கப்படும். இதுகுறித்து பொது விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரசாரத்தையும் துபாய் நிர்வாகம் தொடங்கியுள்ளது.

துபாய் நகரை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள பல புதுத் திட்டங்களை துபாய் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பொது இடங்களில் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் புளிச் புளிச் என துப்புவோருக்கு கடும் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இப்படி துப்புவோருக்கு 500 திர்ஹாம் அபராதம் (நம்ம ஊர் மதிப்பில் ரூ. 6000) அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கட்டடங்களின் பால்கனிகளில் துணிகளைக் காயப் போடுவது, குப்பைகளை போட்டு வைப்பது உள்ளிட்டவையும் தடை செய்யப்பட்டுள்ளது.

இதை விட முக்கியமாக வெற்றி, பாக்கு வியாபாரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. (இதை வாயில் போட்டு மென்று துப்புவதில் நம்ம ஆட்கள் ரொம்ப விசேஷமானவர்கள்)

இதுபோன்ற பொருட்களை விற்போருக்கு 5000 திர்ஹாம்கள் அபராதமாம். இதுபோன்ற பொருட்களின் விற்பனை குறித்த தகவலை தெரிவிப்போருக்கு 2000 திர்ஹாம்கள் பரிசாக அளிக்கப்படும்.

இதில் என்ன வேடிக்கை என்றால், வெற்றிலை, புகையிலை உள்ளிட்டவற்றை விற்பனை செய்வோரும், வாங்கிப் பயன்படுத்துவோரும் பெரும்பாலும் இந்தியர்கள்தானாம்.

துபாயில் பொழைக்கப் போனா பிரச்சனை இல்லை. துப்பினால் சிக்கல்தான்.


No comments:

Post a Comment