மாடுகள் வயிற்றில் புழு நீங்கி நன்கு தீவனம் எடுக்க

மாடுகள் வயிற்றில் புழு நீங்கி நன்கு தீவனம் எடுக்க
1. 100 gm பிரண்டை
2. 100 gm உப்பு
3. 100 gm இஞ்சி
4. 100 gm பூண்டு
5.   25   gm  பெருங்காயம்
6. 100 gm ஜீரகம்
7. 100 gm மிளகு
8. 100 gm வெங்காயம்

இவற்றை உரலில் நன்கு இடித்து முட்டை வடிவிலான உருண்டை பிடித்து உலர்த்தி எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் தொடர்ந்து 3 வாரம் ஒவ்வொரு உருண்டை கொடுத்து மாடுகளை 10 மணி வரை வெய்யிலில் கட்டி ஏதும் உணவு கொடுக்க கூடாது.
10 மணிக்கு தண்ணீர் முதலில் கொடுத்தால் நன்கு வயிறு நிரம்ப குடிக்கும் பிறகு தீவனம் கொடுக்கலாம். இப்படி வாரம் ஒரு முறை என 4 முறை கொடுக்கவேண்டும்.
மீண்டும் 6 மாதங்கள் கழித்து இதே முறை பின்பற்றலாம்.

No comments:

Post a Comment