IIT-யில் பொறியியல் B.E/ B.Tech சேர்க்கை – வீணாகும் இட ஒதுக்கீடு

மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனமான ஐஐடி-ல் இந்த ஆண்டு பொறியியல் B.E/ B.Tech சேர்க்கைக்கான நுழைவு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மொத்தம் இந்தியாவில் 15 ஐஐடிகளில் உள்ள 9500 இடங்களுக்கு 13,104 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 2,357 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் (முஸ்லிம்களையும் சேர்ந்து).

ஐஐடி-டில் முஸ்லிம்களையும் சேர்ந்த்து பிற்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு உள்ளது. அதாவது 2565 இடங்கள் பிற்பட்ட வகுப்பினருக்கு உள்ளது ஆனால் தேர்வானதோ 2,357 பேர் மட்டுமே.

இடஒதுக்கீடு மூலம் நமக்கு கிடைக்கும் இடங்களின் 200 இடங்களுக்கு மேல் வீணாக போகின்றது (கடந்த ஆண்டை போல்). ஐஐடி-ல் B.E/ B.Tech படிக்க மிக குறைந்த கட்டணமே, வசதி இல்லாத முஸ்லிம் மாணவர்களுக்கு மத்திய அரசே கல்வி செலவை ஏற்க்கும் ( ஐஐடி-யில் படிக்கும் சிறுபாண்மை மாணவர்களுக்கு மத்திய அரசு சிறப்பான இலவச கல்வி உதவி திட்டத்தை அமல்படுத்தி வருகின்றது).

இங்கு உலக தரத்தில் கல்வி கற்று கொடுக்கப்படுகின்றது. படித்து முடிப்பதற்க்குள் மாதம் பல ஆயிரம் சம்பளத்தில் வேலை (தற்போது ஐஐடி-யில் படிக்கும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான மாத சம்பளம் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரம் வரை). மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளி நாட்டில் மேல்படிப்பு படிக்க வாய்ப்புகள்.

இவை அனைத்தும் உள்ள ஒரே கல்வி நிறுவனத்தில் இட ஒதுக்கீடு வழங்கியும் படிப்பதற்க்கு தகுதிவாய்ந்த முஸ்லிம் மாணவர்கள் இல்லை. பல ஆண்டுகால போராட்டங்களுக்கு பிறகு ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவங்களில் மத்திய அரசு 27% இட ஒதுக்கீடு வழங்கியது, ஆனால் அதை நிரப்புவதற்க்கு கூட தகுதி வாய்ந்த மாணவர்கள் இல்லை என்பது கவலை அளிக்கின்றது.

ஐஐடி நுழைவு தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க தேவை இல்லை வெறும் தேர்ச்சி மட்டும் பெற்றாலே ஐஐடில் இடம் கிடைக்கும் என்ற நிலை உள்ளது ஆனால் முஸ்லிம் மாணவர்கள் தேர்ச்சி கூட பெறுவதில்லை.

பொறியியல் படிப்பு என்றாலே இலட்ச கணக்கில் பணத்தை கொடுத்து ஏதாவது முஸ்லிம் கல்லூரில் சேர்க்க வேண்டும் என்று தான் நமது சமுதாயம் சிந்திக்கின்றதே தவிற இது போன்ற உயர் கல்வி நிறுவங்களில் செலவில்லாமல் படிக்க நமது பெற்றோர்கள் முயற்சி செய்வதில்லை.

இங்கு படிக்க ஒரே ஒரு நுழைவு தேர்வு (IIT-JEE) அவ்வளவுதான் அதிக மார்க் எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை தேர்சி பெற்றால் மட்டும் போதும். முறையாக ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகாலம்  நுழைவு தேர்வுக்கு (IIT-JEE) படித்தாலே இன்ஷா அல்லாஹ் கட்டாயம் தேர்சி பெற்று விடலாம், 10 ஆம் வகுப்பு முடித்து 11 வகுப்பு போகும் மாணவர்களே உங்களுக்கு பொறியியல் படிக்க ஆசையா? இப்போதே (IIT-JEE) நுழைவு தேர்வுக்கு தயாராகுங்கள் இன்ஷா அல்லஹ் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்

அரசு இட ஒதுக்கீடு கொடுத்தால் மட்டும் போதாது நீதிபதி இரங்கநாத் மிஸ்ரா பரிந்துறைசெய்தது போல சேர்க்கைகான தகுதிகளை (கட் ஆஃப் மார்க்) குறைக்க வேண்டும். அபோதுதான் பின் தங்கிய மக்களுக்கு இட ஒதுக்கீடு போய் சேரும்