இருதய நோய் நீக்கும் மூலப்பொருள்கள்..!

இருதய நோய் நீக்கும் மூலப்பொருள்கள்..!
இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க
வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக்
கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.
மகிழ்ச்சியுடன் பானத்தை அருந்துங்கள்....சுவையாகவும் இருக்கும்.
நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்

அருகம் புல் சாறு தெரிந்தவர்களுக்கு கோதுமை புல் சாறு / wheat grass juice / பற்றி தெரியுமா..? பரவி வரும் புதிய நாகரீகம்..!

அருகம் புல் சாறு தெரிந்தவர்களுக்கு கோதுமை புல் சாறு / wheat grass juice / பற்றி தெரியுமா..?பரவி வரும் புதிய நாகரீகம்..!
கோதுமை புல் வளர்ப்பது எப்படி
கோதுமை புல் வீட்டிலேயே வளர்த்து அதில் இருந்து சாறு தயாரிப்பது மிகவும் எளிது.அருகம்புல் போலவே இதுவும் மிகவும் மருத்துவ குணங்கள் நிரம்பியது.
இது சந்தையில் மிகவும் அதிக விலைக்கு விற்கப்படும் ஒரு பொருளாகவும் இருக்கிறது.100 கிராம் கோதுமை புல் பொடி 400 ரூபாய்க்கு மேல் விற்க படுகிறது.இதன் சில நல்ல பயன்களை கீழே தெரிவித்துள்ளேன் .
தேவையான பொருட்கள் :
கோதுமை - 100 கிராம்
வளர்க்க ஒரு தொட்டி (பெரிய தொட்டி எல்லாம் தேவை இல்லை.சிறிய பிளாஸ்டிக் கப்புகள் கூட போதும்.
செய்முறை:
1 )கோதுமையை முழுகும் அளவு நீரில் ஊற வையுங்கள்.12 - 16 மணி நேரம் வரை ஊறலாம்.
2)பின்னர் நீரை நன்றாக வடித்து கழுவி அதை ஒரு துணியில் முடிந்தோ இல்லை ஒரு hotpack லோ வைத்து 12 - 16 மணி நேரம் வைக்கவும்.திறந்து பார்க்கும் போது நன்றாக முளை கட்டி இருக்கும்.
3) நீங்கள் வளர்க்க விரும்பும் பாத்திரத்தில் மண்ணை நிரப்புங்கள்.பின் முளைகட்டிய கோதுமையை அதில் பரப்பி மேலும் மண்ணை தூவி மூடுங்கள்.கவனம் மண்ணை கோதுமை மறையும் வரை தூவினால் போதும் .அளவுக்கு அதிகமாக மண்ணை நிரப்பி மூடினால் கோதுமை புல் வளர்வதில் சிரமம் இருக்கும்.
4) இதற்கு அதிக நீர் தேவை படாது.கோதுமை புல் முளைத்து வெளியில் தெரியும் வரை நீரை கைகளால் தெளித்தால் போதுமானது.
5) படத்தில் இருப்பது விதை இட்டு நான்கு நாட்கள் கழித்து வளர்ந்து இருக்கும் கோதுமை புல்.அடுத்து இருப்பது ஒரு சிறிய பிளாஸ்டிக் டம்ளர் இல் வளர்த்தது.
6) படத்தில் இருப்பது வளர்ந்து 8 நாட்கள் ஆனா கோதுமை புல்.7 - 8 இன்ச் உயரம் வரும் போது நீங்கள் அறுவடைக்கு தயாராகலாம்.!!!
7) அடியில் வெள்ளை நிறத்தில் தெரியும் பகுதியை விட்டு புல்லை நறுக்கலாம்.நீங்கள் நறுக்கிய பின்னரும் புல் வளர தொடங்கும்.இரண்டு முறை அறுவடை செய்த பின்னர் முழுவதும் எடுத்து விதை இட்டு மறுபடியும் தொடங்கலாம்.
8) கோதுமை புல்லை நன்றாக கழுவி கொள்ளவும்.
9) mixie இன் ஜூஸ் extractor இலோ அல்லது blender இலோ கழுவிய புல்லை இட்டு சிறிதளவு நீர் விட்டு அரைத்து எடுக்கவும்.நன்றாக பிழிந்து வடிகட்டினால் கோதுமை புல் சாறு தயார். !

கால் வலிக்கு அரு மருந்தாகும் நெல்லி வெற்றிலை ரசம்...!

கால் வலிக்கு அரு மருந்தாகும் நெல்லி வெற்றிலை ரசம்...!
தேவையானவை:
முழு நெல்லிக்காய் - 10
வெற்றிலை - 20
கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
காய்ந்த மிளகாய் - 4
பூண்டு - 6 பல்
வால் மிளகு- ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
செய்முறை:
• நெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுக்கவும்.
• கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெற்றிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
• வெறும் வாணலியில் காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, பொடியாக அரிந்த பூண்டு, ஒன்றிரண்டாகத் தட்டிய வால்மிளகு, சீரகம் ஆகியவற்றைப் போட்டு இளவறுப்பாக வறுக்கவும்.
• பின்னர், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெற்றிலை, கொத்தமல்லி இலையை அதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
• நன்றாக வதங்கியதும் ஆற வைத்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
• வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு வதக்கவும்.
• அதில் நெல்லிக்காய் சாறு, தேவையான அளவு நீர் சேர்த்துக் கொதிக்கவைக்கவும். அடுப்பை மிதமாக எரியவிடவும். கொதிக்கும் பக்குவம் வந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்கவிடாமல் கீழே இறக்கவும்.
மருத்துவப் பயன்: உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதய நோயாளிகளுக்கும் ஏற்ற உணவு. எலும்புப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.